Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் சவூதி சுற்றுலாத் துறையில் மனிதவளத்தை மேம்படுத்தவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

சவூதி சுற்றுலாத் துறையில் மனிதவளத்தை மேம்படுத்தவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

209
0

சவூதி அரேபியாவில் சுற்றுலாத் துறையில் மனிதவளத்தை மேம்படுத்தச் சுற்றுலா அமைச்சகம் மற்றும் மனித வள மேம்பாட்டு நிதியம் (HADAF), சுற்றுலா அமைச்சகத்தின் சுற்றுலா மனித திறன் மேம்பாட்டுக்கான துணை செயலாளர் முகமது பின் மொயீன் பௌ ஷனாக், மற்றும் HADAF-ன் வணிக துணை இயக்குநர் ஜெனரல் ஃபிராஸ் பின் அப்துல்அஜிஸ் அபா அல்-கைல் ஆகியோருடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் சுற்றுலாத் துறையில் தொழில் வழிகாட்டுதல், பயிற்சி, தகுதி மற்றும் அதிகாரமளித்தல் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையிலான கூட்டுப் பணியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

உள்ளூர் பணியாளர்களை ஆதரிக்கும் முன்முயற்சிகளைத் தொடங்கி பல்வேறு சுற்றுலாத் துறைகளில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் தொழில்முறை நிலைத்தன்மையை மேம்படுத்துதல் போன்ற ஒத்துழைப்பிற்கான பல துறைகளையும் இது உள்ளடக்கியது குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!