சவூதி அரேபியாவில் இரசாயன பொருட்கள் துறையில் மொத்த முதலீட்டின் அளவு 470 பில்லியன் ரியால் ஆகும், இது தொழில்துறை துறையில் மொத்த முதலீட்டில் 35% என அல்-இக்திசாதியா செய்தி நிறவனத்திடம் பேசிய கைத்தொழில் மற்றும் கனிம வள அமைச்சகம் (எம்ஐஎம்) கூறியுள்ளது.
MIM வழங்கிய தொழில்துறை உரிமங்களின் எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து ஜூன் இறுதி வரை 557ஐ எட்டியுள்ளது என்று அமைச்சகத்துடன் இணைந்த தொழில்துறை மற்றும் சுரங்கத் தகவல்களுக்கான தேசிய மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 6 மாதங்களில், சவூதி அரேபியாவின் மொத்த தொழில்துறை நிறுவனங்களின் எண்ணிக்கை 10,982 ஐ எட்டியுள்ளது, மேலும் அதன் முதலீட்டு மதிப்பு 1.4 டிரில்லியன் ரியால்களை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.