ஏப்ரல் 15 செவ்வாய்க் கிழமை மாலை ஜெத்தா ஷரஃபிய்யாவில் உள்ள லக்கி தர்பார் ஆடிட்டோரியத்தில் NRTIA மற்றும் ஜெத்தா மேற்கு மண்டல தி.மு.க சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சவூதி அரேபிய NRTIA தலைவர் பிரேம் நாத் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
ஜெத்தா மேற்கு மண்டல தி.மு.கவின் செயலாளர் ஜாஹிர் உசேன் அவர்கள் துபாயில் சமீபத்தில் நடந்த மக்களின் மனம் கவர்ந்த முதல்வர் எனும் புத்தக வெளியீட்டில் தான் எழுதி பிரசுரமான முதல்வர் ஸ்டாலின் அவர்களின் சாதனைகள் பற்றிய கவிதை வடிவிலான கட்டுரையை எடுத்துரைத்தும், சனாதன சக்திகளின் சதிகளை முறியடிக்க இளைய தலைமுறையினர் ஒற்றுமையினை வலியுறுத்தியும் முதல்வர் ஸ்டாலின் அவர்களின் சிறப்பான ஆட்சியை எடுத்துரைத்தும், ஒன்றிய அரசு தமிழ் நாட்டிற்கு செய்கின்ற ஓரவஞ்சனை குறித்தும் பேசினார். அவரை தொடர்ந்து கூட்டணி கட்சிகள் மற்றும் பிற தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகளான ஜெத்தா தமிழ் மன்றத்தின் ஆதம் அபுல் ஹஸன், தமிழ்ப் பேரவை அபுபக்கர், JTS காஜா, அகமது பாஷா, IWF ரில்வான், ஜெத்தா முத்தமிழ் சங்கத்தின் ரஃபிக் ஹூஷைன் உள்ளிட்டவர்கள் கோரிக்கைகள் உட்பட வாழ்த்துரைகள் வழங்க, திமுக வின் மூத்த நிர்வாகி தாயகத்தில் இருந்து வந்திருந்த சட்னி மீரான் என்றழைக்கப் படும் காயல் செய்யது மீரான் அவர்கள் நல்லாட்சியை எடுத்துரைக்க நிறைவில் தாதை இஸ்மாயில் சவூதி தமிழ் மீடியா மற்றும் சவூதி தமிழ் கலாச்சார மையத்தின் சார்பில் வருகின்ற ஏப்ரல் 18 அன்று பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் கே நவாஸ்கனி அவர்களின் வருகையுடன் நடக்கும் இஃப்தார் நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுத்தும், வந்திருந்த அனைத்து தமிழ் மக்களுக்கும் நன்றியுரை கூற இரவு உணவுடன் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றதாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய திமுக வின் மூத்த நிர்வாகி மேலக்காவிரி ஹாஜா முஹையுத்தீன் அவர்கள் சவூதி தமிழ் மீடியாவிற்கு தெரிவித்தார்.