சவுதி அரேபிய கால்பந்து கூட்டமைப்பு (SAFF), 2034 FIFA உலகக் கோப்பையின் ஹோஸ்டிங் உரிமைகளை ஏலம் எடுப்பதற்கான தனது விருப்பத்தை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தி, FIFA க்கு உள்நோக்கக் கடிதம் (LOI) மற்றும் கையொப்பமிடப்பட்ட ஆவணத்தைச் சமர்ப்பித்தது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஏலமானது, மதிப்புமிக்க போட்டியை நடத்தும் சவுதி அரேபியாவின் முதல் முயற்சியைப் பிரதிபலிப்பதோடு அனைத்து மட்டங்களிலும் புதிய கால்பந்து வாய்ப்புகளை உருவாக்கும் நாட்டின் அர்ப்பணிப்பை பிரதிபலிப்பதாக SAFF தலைவர் யாசர் அல் மிசெஹால் கூறினார்.
2034 FIFA உலகக் கோப்பை, சவூதி அரேபியாவின் வளர்ச்சியைக் காணவும், அதன் கலாச்சாரத்தை அனுபவிக்கவும், அதன் வரலாற்றின் ஒரு பகுதியாக மாறவும் உலகிற்கு அழைப்பு விடுப்பதாக அல் மிசெஹால் மேலும் கூறினார்.
SAFF அதன் நோக்கங்களை அறிவித்த 72 மணி நேரத்திற்குள் சவுதி அரேபியாவின் முயற்சிக்குப் பல்வேறு கண்டங்களிலிருந்து 70 க்கும் மேற்பட்ட FIFA உறுப்பினர் சங்கங்கள் பகிரங்கமாக உறுதியளித்துள்ளன.
2018 ஆம் ஆண்டு முதல் பல்வேறு விளையாட்டுகளில் ஆண் மற்றும் பெண் இருபாலருக்கும் 50 க்கும் மேற்பட்ட சர்வதேச நிகழ்வுகளை வெற்றிகரமாக நடத்தியது, கால்பந்து, மோட்டார்ஸ்போர்ட்ஸ், டென்னிஸ், குதிரையேற்றம், ஸ்போர்ட்ஸ் மற்றும் கோல்ஃப் உள்ளிட்ட முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வுகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட ஹோஸ்ட் ஆகச் சவூதி அரேபியா திகழ்வது குறிப்பிடத்தக்கது.