சவூதி அரேபியா, வேலையின்மை மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குதல் ஆகியவற்றில் அதன் சவூதி விஷன் 2030 இலக்குகளை அடைய நெருங்கி வருவதாகத் தோஹாவில் நடந்த கத்தார் பொருளாதார மன்றத்தின் நான்காவது பதிப்பில் கலந்து கொண்ட போது சவூதி அரேபிய நிதி அமைச்சர் முகமது அல் ஜதான் கூறினார்.
வேலை வாய்ப்புச் செயல்பாட்டில் தனியார் துறையின் பங்கை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம் என்று குறிப்பிட்ட அவர், சவூதி விஷன் 2030 அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 15 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.
உலகளாவிய பணவீக்கத்தின் போது திட்டங்களின் செலவுகள் அதிகரித்து வருவதால், பணவீக்கத்தை ஏற்படுத்துகிறது மற்றும் பொருளாதாரத்தை அதிக வெப்பமாக்குகிறது என்று அவர் குறிப்பிட்டார். வளைகுடா நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் மறுவடிவமைக்கும் நிலையில் சவூதி அரேபியா இருப்பதாக அமைச்சர் கூறினார்.
சவூதி கத்தார் இடையே கூட்டு முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பாகச் சவூதி அரேபியாவுடன் மிகுந்த ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருவதாக கத்தார் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல்தானி கூறினார்.
கத்தாரின் நிதி அமைச்சர் அலி அல்-குவாரி, கத்தார் தற்போது தனியார் துறையின் திறனை வளர்ப்பதிலும் மனித வளத்தில் முதலீடு செய்வதிலும் கவனம் செலுத்துகிறது என்றார். தோஹாவில் நடைபெற்ற மூன்று நாள் கருத்தரங்கில் பொது மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் மற்றும் தலைவர்கள் பங்கேற்றனர்.





