Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் சவூதி அரேபியா மிகப்பெரிய இஸ்லாமிய நிதி சந்தை என இஸ்லாமிய நிதிச் சேவை வாரியத்தின் தலைவர்...

சவூதி அரேபியா மிகப்பெரிய இஸ்லாமிய நிதி சந்தை என இஸ்லாமிய நிதிச் சேவை வாரியத்தின் தலைவர் அல்-சயாரி புகழாரம்.

225
0

சவூதி மத்திய வங்கியின் (SAMA) ஆளுநரும், இஸ்லாமிய நிதிச் சேவை வாரிய (IFSB) கவுன்சிலின் தலைவருமான அய்மன் அல்-சயாரி IFSB 20வது ஆண்டு விழாக் கருத்தரங்கில் IFSB கவுன்சில் உறுப்பினர்களை வரவேற்று, இஸ்லாமிய நிதியுடன் ஆழமான வரலாற்று உறவைக் கொண்டுள்ள சவூதி அரேபியா உலகின் மிகப்பெரிய இஸ்லாமிய நிதிச் சந்தை எனவும் அதன் மொத்த இஸ்லாமிய சொத்துக்கள் சவூதி ரியால் 3.1 டிரில்லியனைத் தாண்டியுள்ளதாகவும் கூறினார்.

கடந்த 3 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 9.6% சராசரி வளர்ச்சி பெற்று சவூதி ரியால் 11.2 டிரில்லியனுக்கும் அதிகமாகச் சொத்து மதிப்பு இருப்பதால், உலகளாவிய இஸ்லாமிய நிதித் துறை விரைவான வளர்ச்சியைக் கண்டுள்ளதாக அல்-சயாரி குறிப்பிட்டார்.

2023 ஆகஸ்டு 14 முதல் 16 வரை ரியாத்தில் சவூதி மத்திய வங்கி நடத்திய IFSB இன் வருடாந்திர அமர்வில், இஸ்லாமிய நிதித் துறையில் முன்னேற்றங்கள், இஸ்லாமிய நிதிச் சேவைகள் தொழில்துறையின் (IFSI) பின்னடைவு மற்றும் நிலைத்தன்மையை உயர்த்துவது குறித்து விவாதிக்கபட்டது.

இந்த வருடத்தின் வருடாந்த அமர்வில் தொழில்துறையைச் சேர்ந்த நிபுணர்கள் இஸ்லாமிய நிதித் துறையின் வரலாற்று முன்னேற்றங்கள் மற்றும் உறுப்பு நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் அதன் பங்கை ஆராய்ந்து, தொழில்துறையை மேம்படுத்துவதில் சர்வதேச ஒத்துழைப்பை வலியுறுத்தினர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!