செப்., 23ம் தேதி, சவூதி அரேபியா 93வது தேசிய தின கொண்டாட்டத்துடன் இணைந்து சவுதியா ஆலன் (SAUDIA NOW) என்ற புதிய சேனலைத் தொடங்கவுள்ளது. ஊடகத்துறை அமைச்சரும், சவூதி ஒலிபரப்பு ஆணையத்தின் (SBA) இயக்குநர்கள் குழுவின் தலைவருமான சல்மான் அல்-தோசரி, புதிய சேனலைத் தொடங்குவதாக அறிவித்தார்.
இந்தச் சேனல் அனைத்து அதிகாரப்பூர்வ நிகழ்வுகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்கான அதிகாரப்பூர்வ சவூதி தளமாகச் செயல்படும்.சவூதி விஷன் 2030ன் இலக்குகளை அடைவதற்காகப் பெரிய அளவிலான நிகழ்வுகளை முன்னிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த நடவடிக்கை உள்ளூர் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதற்கான SBA இன் முயற்சிகளின் ஒரு சிறு பகுதியாகும்.
புதிய சேனலைத் தொடங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆணையம் முடித்துள்ளதாக SBA இன் தலைமை நிர்வாக அதிகாரி முகமது அல்-ஹார்டி கூறினார்.
புதிய சேனல் சமூக வலைதளங்களுடன் இணைக்கப்பட்டு, பார்வையாளர்களின் பெரும் பகுதியினரை சென்றடையும் மற்றும் பொதுமக்களுடன் தொடர்பு கொள்ளும்” என்று அமைச்சர் கூறினார்.
சேனலின் உள்ளடக்கத்தை மேம்படுத்தவும், தரமான சேவைகளை வழங்கவும் ஆணையம் பல்வேறு நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளதாக அல்-ஹார்தி கூறினார்.