சவூதி விஷன் 2030ன் மற்றும், சுற்றுச்சூழல், நீர் மற்றும் வேளாண்மை அமைச்சகத்தின் (MEWA) ஒருங்கிணைந்த முயற்சிகளின் விளைவாக 2024 ஜனவரியில், சவூதி அரேபியாவில், தூசி மற்றும் மணல் புயல்கள் 21 ஆண்டுகளில் குறிப்பிடத் தக்க அளவில் குறைப்பைக் கண்டுள்ளது.
தற்போது இந்தக் குறைப்பு 94% ஆக உள்ளது.
மணல் மற்றும் தூசி புயல் எச்சரிக்கை மையம் வெளியிட்ட அறிக்கை, பல்வேறு நகரங்களில் குறிப்பிடத் தக்க குறைப்புகளை எடுத்துக்காட்டியது. ரியாத் மற்றும் தம்மாம் சுற்றுச் சூழல் நிகழ்வுகளில் 100% குறைப்பை எட்டியுள்ளன. வாடி அல்-தவாசிர் மாகாணம் 81% மற்றும் அல்-அஹ்சா மாகாணம் 83% சரிவைக் கண்டுள்ளது.





