சவூதி அரேபியா ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் பீப்பாய்கள் என்ற அளவில் எரிசக்தி உற்பத்தி குறைப்பை ஆகஸ்ட் மாதம்வரை நீட்டித்துள்ளது.
எரிசக்தி அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ ஆணையம், ஜூலை மாதம் நடைமுறைக்கு வந்த ஒரு நாளைக்கு ஒரு மில்லியன் பீப்பாய்கள் என்ற தன்னார்வக் குறைப்பை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கும் என்று அறிவித்துள்ளது.
மேலும் ஆகஸ்ட் மாதத்திற்கான நாட்டின் உற்பத்தி ஒரு நாளைக்கு தோராயமாக 9 மில்லியன் பீப்பாய்களாக இருக்கும் என்றும் கணிக்கப்படுகிறது.
இந்த. உற்பத்தி குறைப்பு ஏப்ரல் 2023 இல் சவூதி அரேபியாவால் முன்னர் அறிவிக்கப்பட்ட உற்பத்திக் குறைப்பை விடக் கூடுதலாக உள்ளது.
எண்ணெய் சந்தைகளின் ஸ்திரத்தன்மை மற்றும் சமநிலையை ஆதரிக்கும் நோக்கத்துடன் OPEC பிளஸ் நாடுகள் மேற்கொண்ட முன்னெச்சரிக்கை முயற்சிகளை வலுப்படுத்தவே இந்தக் கூடுதல் உற்பத்தி குறைப்பு நடவடிக்கை என்று ஆணையம் மேலும் தெரிவித்தது.