அல்-பட்டா துறைமுகம் வழியாகச் சவூதி அரேபியாவிற்கு அனுப்பப்பட்ட பிளாஸ்டிக் தாள்களுக்குள 79,20,000 ஆம்பெடமைன் மாத்திரைகளைக் கடத்தும் முயற்சியை
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) சவூதி அரேபியாவுடன் இணைந்து முறியடித்தது.
சவூதி இளைஞர்களை இலக்காகக் கொண்டு இந்தப் போதைப்பொருள் கடத்தல் நடந்ததாகப் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பொது இயக்குநரகத்தின் (ஜிடிஎன்சி) செய்தித் தொடர்பாளர் மேஜர் மர்வான் அல்-ஹஸ்மி அவர்கள் கூறியுள்ளார்.
நான்கு சவூதி குடிமகன்கள், 2 சிரியர்கள் தலைநகர் ரியாத் பகுதியில் கைது செய்யப் பட்டுள்ளனர், அவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, சந்தேகத்திற்குரிய நபர்களைப் பொது வழக்கறிஞரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல், ஊக்குவித்தல் குறித்து தகவல் தெரிவிக்க மக்கா, ரியாத் மற்றும் அல்-ஷர்கியா பகுதிகளில் உள்ள குடிமக்கள் (911) என்ற எண்ணிற்கும், சவூதியின் மற்ற பகுதிகளில் உள்ள மக்கள் (999) என்ற எண்ணிற்கும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு பாதுகாப்பு முகமைகள் வலியுறுத்தியுள்ளது.GDNC இன் எண்: (995) மற்றும் மின்னஞ்சல்: (995@gdnc.gov.sa) தளங்களில் அறிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும், மேலும் அனைத்து தகவல்களும், அறிக்கைகளும் இரகசியமாகக் கையாளப்படும் எனவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.