பொதுவான நலன் கொண்ட பல துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த சவூதி அரேபியாவும், இலங்கையும் ஒப்புக்கொண்டுள்ளது.
பாதுகாப்பு, நீதி, தொழிலாளர், வர்த்தகம், தொழில், முதலீடு,நிதி, பொருளாதாரம், போக்குவரத்து, போன்ற 65 துறைகள் குறித்து விவாதித்த பின் இரு நாடுகளும் ஒப்பந்தங்களை மேற்கொண்டது.
சவூதி-இலங்கை கூட்டுக் குழு, மனிதவள மற்றும் சமூக அபிவிருத்தி துணை அமைச்சர் அப்துல்லா அபு தானைன் அவர்கள் வெளி விவகாரத்துறை அமைச்சர் தாரக பாலசூரிய ஆகியோர் தலைமையில் ரியாத்தில் நடைபெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்த,இரு தரப்பினரும் மேற்கொண்ட முயற்சிகளை அபு தானைன் பாராட்டினார்.இந்தக் குழுவின் இரண்டாவது அமர்வு இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெறவுள்ளது.
சவூதி-இலங்கை கூட்டுக் குழுவின் முதல் அமர்வை நடத்தியதற்காக சவூதி அரேபியாவுக்கு அபு தானைன் நன்றியினை தெரிவித்தார்.மேலும் முதல் அமர்வின் பரிந்துரைகளைப் பின்பற்றுவதற்கான கூட்டு முயற்சிகள் மற்றும் ஒத்துழைப்பைத் தொடர்வதன் முக்கியத்துவத்தை உறுதிப்படுத்தினார்.
மே 21 ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இதன் முதல் அமர்வில் பல பட்டறைகள் தொடங்கப்பட்டது. இரு நாடுகளின் தலைவர்களின் வழிகாட்டுதல்களுடன்,
இரு நாட்டு மக்களை சென்று அடையும் வகையில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.