தகவல் தொடர்பு, விண்வெளி மற்றும் தொழில்நுட்ப ஆணையம் ஆனது (CST), தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்(MCIT), சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் (ITU) ஆகியவற்றுடன் இணைந்து “சவுதி அரேபியாவில் ICT மற்றும் விண்வெளி நிலைத்தன்மை” அறிக்கையின் இரண்டாவது பதிப்பை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம், டிஜிட்டல் பிளவுகளைக் குறைக்கவும், தொலைதூரப் பகுதிகளில் ICT சேவைகளை வழங்கவும், புதுப்பிக்கத் தக்க எரிசக்தி ஆதாரங்களின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கவும், மறுசுழற்சி விகிதங்களை உயர்த்தவும் CSTயின் முயற்சிகளை அறிக்கை பிரதிபலிப்பதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
5G தொழில்நுட்பத்தின் மூலம் HAPS நெட்வொர்க்குகளைப் பயன்படுத்துதல், வளர்ந்து வரும் டெக்னாலஜிஸ் சாண்ட்பாக்ஸின் வெளியீடு, மின்-கழிவு மறுசுழற்சி ஆகிய முன்முயற்சியின் துவக்கம் போன்ற 2022 ஆம் ஆண்டிற்கான டிஜிட்டல் நிலைத்தன்மையில் மிகவும் குறிப்பிடத் தக்க சாதனைகளை அறிக்கை வலியுறுத்தியது.
நிலையான வளர்ச்சி இலக்குகளை (SDGs) ஆதரிக்க டிஜிட்டல் தீர்வுகளை ஏற்றுக்கொண்ட 34 நிறுவனங்களின் 12 வெற்றி பதிப்புகளை அறிக்கை பாராட்டியுள்ளது.