Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் சவூதி அரேபியாவில் 45% இறப்புகள் இதய நோய்களால் ஏற்படுகின்றன என நிபுணர்கள் அறிவிப்பு.

சவூதி அரேபியாவில் 45% இறப்புகள் இதய நோய்களால் ஏற்படுகின்றன என நிபுணர்கள் அறிவிப்பு.

286
0

சவூதி ஹார்ட் அசோசியேஷன் தலைவர் டாக்டர் வலீத் அல்-ஹபீப் சவூதியில் 45 சதவீத இறப்புகள் இதய நோய்கள், முதன்மையாகப் பெருந்தமனி தடிப்பு மற்றும் மாரடைப்பு ஆகியவற்றால் ஏற்படுகின்றன என்று கூறினார்.

Okaz/Saudi Gazette இடம் பேசிய அவர், சவூதி மக்கள் தொகையில் 30 சதவீதத்திற்கும் அதிகமானோர் இதய நோய்களால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளனர் என்றும், சவுதி அரேபியா இதய நோய்க்கான அதிக ஆபத்துள்ள நாடுகளில் ஒன்றாகக் கருதப்படுவதோடு ,இதுவே சவூதியில் மரணத்திற்கு முதல் காரணம் என்றும், இதனால் இதய நோய்களைக் குறைக்க சவுதி சுகாதார கவுன்சிலுக்கு புதிய தரங்களை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்றும் கூறினார்.

அதிக கொலஸ்ட்ரால், உடல் பருமன், புகைபிடித்தல், நீரிழிவு, உடல் உழைப்பு இல்லாமை ஆகியவை இதய நோய்களுக்கு முக்கியக் காரணங்களாகும் என இருதயநோய் நிபுணர் டாக்டர் அல்-ஹபீப் சுட்டிக்காட்டினார்.

நோயாளிக்குக் கண்டறியப்படாத நோய்களுக்கு மேலதிகமாக, எலக்ட்ரோ கார்டியோகிராமில் ஏற்படும் இடையூறுகளின் விளைவாக இளைஞர்களிடையே இறப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், விளையாட்டு வீரர்களிடையே ஏற்படும் பக்கவாதத்திற்கான காரணங்களில் ஒன்று இதய தசையில் கண்டறியப்படாத நோய்கள் இருப்பது, எனவே பயிற்சி செய்யும் விளையாட்டு வீரர்கள் இதில் கவனம் செலுத்துமாறு டாக்டர் அல்-ஹபீப் அறிவுறுத்தினார்.

இதய சுகாதாரத் துறையில் உள்ள மூத்த மருத்துவ ஆலோசகர்கள் மற்றும் பல்வேறு சிறப்புகள், ஊடக வல்லுநர்கள் மற்றும் சுகாதார அமைச்சக பணியாளர்கள் மற்றும் சுகாதார தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பிரச்சாரங்கள் மேற்கொண்டு, சுகாதார பிரச்சாரக் குழு மற்றும் அதன் மொபைல் கிளினிக்குகள் மூலம் சவூதியின் பல்வேறு நகரங்களில் பரவியுள்ள முக்கிய வணிக மையங்கள் மற்றும் பூங்காக்களுக்குள் உடனடி சோதனைகள் உட்பட பல வழிகள் மூலம் மக்களிடையே விழிப்புணர்வை வலியுறுத்தி வருகின்றனர் என்றும், இந்தப் பிரச்சாரத்தைத் தன்னார்வ சுகாதார சங்கம் சிறப்பு மருந்து நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்துகிறது என்றும் செய்தியாளர் சந்திப்பில் டாக்டர் அல்-ஹபீப் இந்த முயற்சியைப் பற்றி விளக்கினார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!