ரெட் சீ குளோபல் (RSG), சவூதி அரேபியாவில் மிகப்பெரிய ஆஃப்-கிரிட் மின்சார வாகனம் (EV) சார்ஜிங் நெட்வொர்க்கை நிறுவுவதன் மூலம் குறிப்பிடத் தக்க மைல்கல்லை எட்டியுள்ளது.
லூசிட் மற்றும் மெர்சிடிஸ் மாடல்கள் உட்பட, RSG இன் 80 மின்சார வாகனங்களை ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தச் சொகுசு EVகள் சாலைகளில் சார்ஜ் மற்றும் செயல்படுவதை உறுதி செய்கிறது.
ஓட்டுநர்கள், ஹப் மேலாளர்கள், திறமையான தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் EV சார்ஜிங் நிபுணர்கள் போன்று 1,500 புதிய வேலைகளை உருவாக்குவதற்கு அமைக்கப்பட்டுள்ள மொபிலிட்டி ஹப் உட்பட, முன்கூட்டியே முன்பதிவு செய்தல் அல்லது தேவைக்கேற்ப சேவைகள் இந்த உயர்நிலை மின்சாரக் நிலைத்திற்கு விருந்தினர்களை அணுக அனுமதிப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சாதனையின் அறிவிப்புடன் மின்-பைக்குகள், வேன்கள், டிரக்குகள், படகுகள், பராமரிப்பு வாகனங்கள், ஏர்சைடு வாகனங்கள் மற்றும் ஆஃப்-ரோட் பொழுதுப் போக்கு வாகனங்கள் உட்பட பல்வேறு முறைகளில் நிலையான போக்குவரத்து தீர்வுகளை RSG ஆராய்ந்து வருவதாக ரெட் சீ குளோபலின் மொபிலிட்டி குழுமத் தலைவரான ஆண்ட்ரியாஸ் ஃப்ளூரோ கூறியுள்ளார்.
மேலும் தொலைநோக்குத் திட்டத்தில் 50 ரிசார்ட்டுகள், 8,000 ஹோட்டல் அறைகள், 1,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள், சொகுசு மரினாக்கள், கோல்ஃப் மைதானங்கள், பொழுதுபோக்கு, எஃப்&பி, 22 தீவுகள் மற்றும் ஆறு உள்நாட்டில் உள்ள ஓய்வு வசதிகள் ஆகியவையும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.