மனித உரிமைகள் கோப்புக்குச் சவுதி அரேபியா அதிக முக்கியத்துவம் அளிப்பதாகவும், உரிமைகளைப் பாதுகாக்க சவூதியின் சட்டங்கள் வெளிப்படையான விதிகளைக் கொண்டுள்ளன என்றும் ஐநா பொதுச் சபையின் 78வது அமர்வில் (UNGA 78) உரையாற்றிய வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அவர்கள் கூறியுள்ளார்.
சவூதி விஷன் 2030, வளர்ச்சியை மேம்படுத்தி எதிர்கால சந்ததியினரின் கனவுகளைப் பூர்த்தி செய்வதற்கான முயற்சிகளை உருவாக்குதல், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு அதிகாரம் அளித்தல், புதுமை மற்றும் படைப்பாற்றலை வளர்ப்பது, உரையாடல், சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வு ஆகியவற்றின் மதிப்புகளை நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இளவரசர் பைசல் அவர்கள் சர்வதேச சமூகத்தின் மாற்றங்கள் மற்றும் முன்னேற்றங்களுக்கு ஏற்ப, பொதுவான சவால்களை எதிர்கொண்டு அதனைத் திறம்பட நிறைவேற்ற, பாதுகாப்பு கவுன்சிலை சீர்திருத்த சவூதியின் அழைப்பைப் புதுப்பித்தார்.
தீவிரவாதம், பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தை ஆதரிப்பதற்கு எதிராகச் சர்வதேச சமூகம் உறுதியாக நிற்பதன் முக்கியத்துவத்தை சவூதி வலியுறுத்துவதாக இளவரசர் பைசல் அவர்கள் சுட்டிக்காட்டினார்.
சவூதி வெளியுறவு அமைச்சர் ரஷ்ய-உக்ரேனிய நெருக்கடியைத் முடிவுக்குக் கொண்டுவரவும், வேறுபாடுகளைத் தீர்க்கவும், உலகின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தண்மையில் அதன் எதிர்மறையான விளைவுகளைக் கட்டுப்படுத்தவும் சவூதியின் அழைப்பை மீண்டும் வலியுறுத்தினார்.
பாலஸ்தீனப் பிரச்சினைக்கான தீர்வைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்குச் சவுதி அரேபியா தனது எதிர்ப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது என்றும் இளவரசர் பைசல் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.