Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் சவூதி அரேபியாவில் உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கும் விவசாயத் திட்டங்களுக்கு ரீஃப் ஆதரவு.

சவூதி அரேபியாவில் உணவுப் பொருட்களின் விலைகளைக் குறைக்கும் விவசாயத் திட்டங்களுக்கு ரீஃப் ஆதரவு.

175
0

2023 ஆம் ஆண்டில் சவூதி அரேபியாவில் மதிப்பு கூட்டப்பட்ட துறையில் தன்னிறைவு விகிதம் 63% உயர்ந்துள்ளதாகப் பல்வேறு விவசாயத் திட்டங்களை ஆதரிக்கும் நிலையான வேளாண்மை கிராமப்புற மேம்பாட்டுத் குழு (Reef) தெரிவித்துள்ளது.

விவசாய உற்பத்தியை அதிகரித்து பல்வகைப்படுத்துவதன் மூலம் உள்ளூர் உணவு விநியோகத்தை உறுதி செய்வதில் ரீஃப் பங்களித்துள்ளது. உலகளவில் உணவுப் பொருட்களின் விலைகளில் ஏற்படும் ஏற்ற இறக்க விளைவுகளைக் ரீஃப் குறைத்துள்ளது.சவூதி காபி துறை உட்பட பல துறைகளில் 2023 ஆம் ஆண்டில் 1,009 டன் உற்பத்தியுடன் 16% தன்னிறைவு விகிதத்தை எட்டியுள்ளதாகச் சமூக ஊடகங்களில் ரீஃப் அறிவித்துள்ளது.

பழங்கள் துறை 90,000 டன் உற்பத்தியுடன் 22% ஐ எட்டியுள்ளது, இது 2026 ஆம் ஆண்டில் 305,000 டன்களை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ரோஜாக்கள் மற்றும் நறுமண தாவரங்கள் துறை 33% மற்றும் தேன் துறை 49% தன்னிறைவு விகிதத்தை எட்டியுள்ளது. 651 மில்லியன் ரோஜாக்கள் நடப்பட்டுள்ளன.

பயிர்கள் நடப்பு ஆண்டில் 27,000 டன்கள் உற்பத்தி செய்ததன் மூலம் 13% தன்னிறைவு விகிதத்தை எட்டியுள்ளன, மேலும் 2026 ஆம் ஆண்டுக்குள் 195,000 டன்கள் உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2023 இல் விவசாயப் பொருட்களின் உற்பத்தி அளவு 350,537,000 டன்களை எட்டியதால், உணவுப் பொருட்கள் பாதுகாப்பையும் தன்னிறைவையும் அடைய ரீஃப் பங்களித்துள்ளது.

70 வெவ்வேறு தயாரிப்புகளுக்கான திட்டத்தின் ஆதரவு, வேலை வாய்ப்புகளை உருவாக்கிச் சிறு விவசாயிகளின் வருமானம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தப் பங்களித்துள்ளது. 2023ஆம் ஆண்டுக்குள் 150,000 ஹெக்டேரில் 18 மில்லியன் நாற்றுகள் நடுவதை இலக்காகக் கொண்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!