ஹஜ் பயணிகளுக்கு வேண்டிய பல வழிகாட்டுதல்களை ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
பயண நடைமுறைகளை நிறைவு செய்ய விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைத்து ஆவணங்களையும் எடுத்து வருவதன் முக்கியத்துவத்தை அமைச்சகம் நினைவுபடுத்தியுள்ளது மேலும் விமானங்களில் எடுத்துச் செல்லப்படும் பொருட்களில் எலக்ட்ரானிக் சாதனங்களைக் கவனமாக வைத்திருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.
சாமான்களை அனுப்பும் முன் தனித்தனி அடையாளங்கள் வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பிளாஸ்டிக் பைகள், தண்ணீர் பாட்டில்கள் , திரவப் பொருட்கள், அவிழ்க்கப்படாத , கட்டப்படாத சாமான்கள் போன்றவையும் துணியால் மூடப்பட்ட பெட்டிகளும் விமானத்தில் எடுத்துச் செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.
பயணிகள் 60,000 ரியால்களை விடப் பணம் அதிகம் வைத்திருந்தால், தங்களிடம் உள்ள பணம் அல்லது விலை மதிப்பற்ற பொருட்களைப் பட்டியலிட வேண்டும் என்றும் இதில் நகைகள், விலைமதிப்பற்ற உலோகங்கள் , வெளிநாட்டு நாணயங்கள், பரிசுகள் ஆகியவை அடங்கும் என்றும் கூறியுள்ளது.
60,000 ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பொருட்களை ,சவூதி அரேபியாவிற்குள் பயணிகள் நுழையும்போதோ அல்லது வெளியேறும்போதோ, எடுத்துச் சென்றால் சுங்க இலாகாவின் அறிவிப்புப் படிவத்தை நிரப்புவதை உறுதிசெய்யுமாறும் அமைச்சகம் கூறியுள்ளது.
3,000 ரியால்களல்ளுக்கும் மேல் மதிப்புள்ள வணிக பொருட்கள், பழங்கால பொருட்கள் , இறக்குமதி அல்லது ஏற்றுமதியிலிருந்து தடைசெய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்லும் பயணிகள் சுங்க அறிவிப்பை நிரப்புவது அவசியம். சுங்க அறிவிப்பில் கையொப்பமிட்டு நிரப்பாதவர்கள் பொறுப்புக் கூறப்படுவார்கள் என்று அமைச்சகம் எச்சரித்துள்ளது.