முதலீட்டு அமைச்சர் இன்ஜி. காலித் அல்-ஃபாலிஹ் அவர்கள் அரபு உலகை சீனாவுடன் இணைப்பதற்கும், உள்ளூர் நாடுகளில் முதலீடுகளை மேலும் மேம்படுத்துவதற்கும் சவுதி அரேபியாவின் உறுதிப்பாட்டை வலியுறுத்தினார்.
அரபு நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஜிடிபி 3.5 டிரில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது எனவும், அதில் மூன்றில் ஒரு பங்கு சவுதி அரேபியாவில் உள்ளது என்றும், அரபு-சீன வர்த்தகர்கள் மாநாட்டின் 10 வது நிகழ்வில் உரையாற்றும்போது அல்-ஃபாலிஹ் கருத்துக்களை தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் சீனாவில் அன்னிய நேரடி முதலீடு ஆண்டுதோறும் 20 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகவும், அதில் அரபு நாடுகளின் பங்கு சுமார் 23 பில்லியன் டாலர்கள் மட்டுமே என்றும் அமைச்சர் கூறினார்.
இந்த மாநாட்டின் மூலம், ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மைக்காகச் சவூதி விஷன் 2030 மூலம் இயக்கப்படும் புதிய நவீன பட்டுப் பாதையை அறிமுகப்படுத்த நாங்கள் பணியாற்றி வருகிறோம் என்றும் மேலும் அதன் துவக்கத்திற்கான எரிபொருள் நமது இளைஞர்கள் மற்றும் நமது நலன்களை அடைவதற்கான எங்கள் கண்டுபிடிப்புகள் ஆகும் என்றும் அவர் கூறினார்.
அரபு லீக்குடன் இணைந்து முதலீட்டு அமைச்சகம் ஏற்பாடு செய்த மாநாட்டைப் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் தலைமையில் வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் தொடங்கியும் வைத்தது குறிப்பிடத்தக்கது.