உலக வானிலை அமைப்பு (WMO) மணல் மற்றும் தூசி புயல் எச்சரிக்கை பகுதி மையத்தை அங்கீகரித்துள்ளது. மேலும் உலகளாவிய மணல் மற்றும் தூசி புயல் எச்சரிக்கை மற்றும் மதிப்பீட்டு அமைப்பு (SDS-WAS) வழிகாட்டுதல் குழுவில் பகுதி அலகு பிரதிநிதியாக முழு அங்கத்துவத்தை வழங்கியுள்ளது.
சவூதி தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) CEO மற்றும் மணல் மற்றும் தூசி புயல் எச்சரிக்கை பகுதி மையத்தின் மேற்பார்வையாளர் டாக்டர். அய்மன் குலாம், வானிலை, காலநிலை துறையில் சவூதியின் பகுதி மற்றும் சர்வதேச முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில் இம்முயற்சி வருகிறது என்று கூறினார்.
WMO இன் குடையின் கீழ் SDS-WAS க்கு சவூதியின் ஆதரவையும் இது அங்கீகரிக்கிறது.மேலும் இது அவர்களின் அபாயங்களைக் குறைக்க தூசி மற்றும் மணல் நிகழ்வுகள்பற்றிய கூட்டு ஆராய்ச்சியைச் செயல்படுத்துவதையும் மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மணல் மற்றும் புழுதி புயல் எச்சரிக்கை பகுதி மையம், சவூதியில் உள்ள தூசி மற்றும் மணல் நிகழ்வுகளைக் கண்காணித்து, புயல்கள் பற்றி முன்கூட்டியே எச்சரித்து, WMO தரநிலைகளின்படி, மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், இயற்கை அபாயங்களிலிருந்து சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.