சவூதி அரேபியாவின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த வெள்ளிக்கிழமை வரை இடியுடன் கூடிய மழை தொடரும் என வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது.
மழைக் காலங்களில் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும், நீரோடைகள் போன்ற இடங்களில் நீந்துவது ஆபத்தாக முடியும் எனச் சிவில் பாதுகாப்புப் பிரிவினர் எச்சரித்துள்ளனர். சமூக ஊடக தளங்கள் மூலம் அறிவிக்கப்பட்ட அறிவுறுத்தல்களை அனைவரும் பின்பற்றுமாறு குடிமைத் தற்காப்பு அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
மக்கா, அசிர், ஜிசான் மற்றும் அல்-பஹா ஆகிய பகுதிகள் மிதமானது முதல் கனமழையால் பாதிக்கப்படக்கூடும். மக்கா பகுதியில் தாயிஃப், அல் ஜும்ம், பஹ்ரா, அல் குன்ஃபுதா, அல்-லித், அல்-கமில், குலைஸ், மைசான், ஆதம் மற்றும் அல்-அர்தியத் ஆகிய இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாதி அத்-தவாசிர், அஸ் சுலையில், அல் குவையா, அஃபிஃப் மற்றும் அல் அஃப்லாஜ் மற்றும் அல் முவே, அல் குர்மா, ரன்யாஹ் உள்ளிட்ட ரியாத் பகுதிகள், மற்றும் மக்கா பகுதியில் உள்ள துர்பா, மதீனா மற்றும் நஜ்ரான் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.