இந்த வார இறுதி வரை சவூதி அரேபியாவின் 4 பகுதிகளில் வெப்பநிலை 46 முதல் 50 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்றும், ரியாத்தின் கிழக்கு, தெற்கு பகுதிகள், அல்-காசிமின் கிழக்கு பகுதிகள் மற்றும் மதீனாவின் மேற்கு பகுதிகளில் 46 முதல் 48 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.மேலும் உயர் வெப்பநிலையின் தாக்கம் தொடரும் என்றும் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) அறிவித்துள்ளது.
கிழக்கு மாகாணம் மற்றும் மத்திய பகுதிகளில் காலநிலை தொடர்ந்து வெப்பமாகவோ அல்லது மிக வெப்பமாகவோ இருக்கும் என்றும் NCM தெரிவித்துள்ளது.
மதீனா, மக்கா பகுதிகள், மக்கா மற்றும் ஜசான் பகுதிகளுக்கு இடையேயான கடற்கரை சாலைகளில் தூசி நிறைந்த காற்று இருக்கும் என்றும், அசிர் மற்றும் ஜிசான் பகுதிகளில் இடியுடன் கூடிய மேகங்கள் உருவாக வாய்ப்புள்ளதாகவும் மையம் சுட்டிக்காட்டியுள்ளது.