சவூதி அராம்கோ தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அமின் நாசர் தொழிற்சாலைகளுக்கான உள்நாட்டு தேவையைப் பூர்த்தி செய்வதற்காக 2030 ஆம் ஆண்டிற்குள் எண்ணெய் நிறுவனங்களின் எரிவாயு உற்பத்தியை 50-60 சதவிகிதம் அதிகரிக்கும் திட்டங்களை அறிவித்தார்.
ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் நடைபெறும் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் (OPEC) சர்வதேச கருத்தரங்கில் பேசிய அவர், “2030 ஆம் ஆண்டுவரை எரிசக்தி உற்பத்தி அளவை அதிகரிக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம், மேலும் ஒரு நாளைக்கு 13 மில்லியன் பீப்பாய்களை எட்டுவதே எங்கள் இலக்கு” என்று கூறினார்
சவூதி விஷன் 2030க்குள் இயந்திரங்கள், கப்பல்கள் மற்றும் கடல்சார் தொழில்கள் போன்ற பல தொழில்களுக்கு ஆதரவளிக்க நாங்கள் பங்களிக்கிறோம் எனவும், முதல் கட்டத்தில் தூய ஹைட்ரஜன் உற்பத்தியை 11 மில்லியன் டன்களை எட்டுவதற்கும், கார்பன் சேமிப்பை அதிகரிப்பதற்கும் Aramco இலக்கு வைத்துள்ளது என்றும் நாசர் கூறினார்.
சவூதி அரேபிய எரிசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல் அஜிஸ் பின் சல்மான் 4,000 கி.மீ., எரிவாயு குழாய்களைச் சேர்ப்பதன் மூலம், எரிவாயு உற்பத்தியை 60 சதவீதம் அதிகரிக்க சவூதி செயல்பட்டு வருகிறது எனவும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் எண்ணெய், எரிவாயு மற்றும் சுத்தமான எரிசக்தி உற்பத்தியை அதிகரிப்பதற்கான சவூதியின் அடிப்படை திட்டங்களைப் பற்றி அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.
சவூதி அரேபியாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பு 2021 ஆம் ஆண்டின் இறுதியில் 337.3 பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய்க்குச் சமமானதாக இருந்து 2022 ஆம் ஆண்டில் நான்காவது ஆண்டாக 0.3 சதவிகிதம் அதிகரித்து, 338.4 பில்லியன் பீப்பாய்கள் எண்ணெய்க்குச் சமமானதாக இருந்தது.
சவூதி அராம்கோ தரவுகளின்படி, சவூதியின் எண்ணெய் வயல்களில் 2021 ஆம் ஆண்டின் இறுதியில் 261.6 பில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் மற்றும் இருப்புக்களும் மற்றும் 2021 இறுதியில் 36 பில்லியன் பீப்பாய்களுக்கு எதிராக 36.1 பில்லியன் பீப்பாய்கள் இயற்கை எரிவாயு திரவங்கள் அடக்கி, 2021 ஆம் ஆண்டின் இறுதியில் 241.5 டிரில்லியன் ஸ்டாண்டர்ட் கன அடியுடன் ஒப்பிடும்போது 2022 ஆம் ஆண்டின் இறுதியில் 246.7 டிரில்லியன் ஸ்டாண்டர்ட் கன அடி கூடுதலாக இருந்தது, இதனால் 2022 ஆம் ஆண்டில் இயற்கை எரிவாயு இருப்புக்கள் 2.2 சதவிகிதம் அதிகரித்ததன் விளைவாக மொத்த எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புக்கள் அதிகரித்தன.
மேலும், சலுகை ஒப்பந்தம் 60 ஆண்டு கால அவகாசம் முடிவடைந்த பிறகு கூடுதலாக 40 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம், அத்தகைய நீட்டிப்புக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பாகச் சவுதி அராம்கோ மற்றும் அரசாங்கத்தின் ஒப்பந்தத்திற்கு உட்பட்டு நடத்தப்படும் என்றும் அமின் நாசர் அறிவித்தார்.