2023 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில், சவூதி அரேபியாவின் பொருளாதாரத் துறைகள் மற்றும் செயல்பாடுகள் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்தத் துறைகளில் 83% வளர்ச்சி விகிதத்துடன், தளவாட சேவைத் துறை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
லாஜிஸ்டிக் சேவைத் துறையின் வணிகப் பதிவுகள்,2023 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டின் இறுதியில் 4,228 ஆக இருந்தது, கடந்த ஆண்டு இது 2,337 வணிகப் பதிவுகளாக இருந்ததாக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அப்துல்ரஹ்மான் அல்-ஹுசைன் கூறியுள்ளார்.மேலும் ரோபோ தொழில்நுட்பங்கள் மற்றும் இணையப் பாதுகாப்புத் துறைகளின் வணிகப் பதிவுகள் 52% வளர்ச்சியடைந்துள்ளது.
ரோபோ தொழில்நுட்பங்களின் வணிகப் பதிவுகள் 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டின் இறுதி வரை 2,344 ஆக இருந்தது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது 1,537 ஐ எட்டியுள்ளது. இணையப் பாதுகாப்பின் வணிகப் பதிவுகள் நடப்பு ஆண்டின் இரண்டாம் காலாண்டின் இறுதியில் 2,229 ஐ எட்டியது மற்றும் 2022 ஆம் ஆண்டில் இது 1,462 ஆக இருந்தது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத் துறையின் வணிகப் பதிவுகள் 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 49% வள்ர்ச்சி பெற்று 4,229 ஐ எட்டியது, 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2,823 ஆக இருந்தது. இந்தத் துறைகள் மற்றும் செயல்பாடுகளின் முக்கிய பங்கின் காரணமாக இந்த வளர்ச்சி ஏற்படுகிறது என்று அல்-ஹுசைன் கூறியுள்ளார்.