நாட்டின் பல்வேறு பகுதிகளில் குடியுரிமை, தொழிலாளர் சட்டங்கள் மற்றும் எல்லைப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காகச் சுமார் 12,777 பேர் ஒரு வாரத்திற்குள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜூன் 8 முதல் 14 வரையில் நாடு முழுவதும் பாதுகாப்புப் படைகளின் பல்வேறு பிரிவுகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின்போது கைது செய்யப்பட்டனர்.
குடியுரிமை முறையை மீறியதற்காக 6,695 நபர்களும், எல்லை பாதுகாப்பு விதிகளை மீறிய 3,960 நபர்களும், மற்றும் 2,122 தொழிலாளர் சட்டங்களை மீறியவர்களும் கைது. 628 பேர் நாட்டிற்குள் எல்லையைக் கடக்க முயன்றபோது கைது செய்யப்பட்டனர், 60% ஏமனியர்கள், 38% எத்தியோப்பியர்கள் மற்றும் 2% பிற நாட்டினர் ஆவர்.சவூதியிலிருந்து வெளியேற எல்லையைக் கடக்க முயன்றபோது 149பிடிபட்டனர்.
விதிமுறைகளை மீறியவர்களைக் அடைக்கலப்படுத்தியதற்காக, 12 பேர் கைது செய்யப்பட்டனர். மொத்தம் 31,504 விதிமுறைகளை மீறியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 26,149 ஆண்கள் மற்றும் 5,355 பெண்கள். பயண ஆவணங்களைப் பெறுவதற்காக 24,924 நபர்கள் தூதரகப் பணிகளுக்கும், பயண முன்பதிவுகளை முடிக்க 1,879 பரிந்துரைக்கப்பட்டனர். மேலுன் 7,557 நாடு கடத்தப்பட்டனர்.
ஒரு ஊடுருவல்காரர் நாட்டிற்குள் நுழைய அல்லது போக்குவரத்து, தங்குமிடம் அல்லது ஏதேனும் உதவி வழங்குபவர்களுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அதிகபட்சமாக 1 மில்லியன் ரியால் அபராதம் விதிக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.