சவுதி அரேபியாவில் தேவைக்கும் விநியோகத்திற்கும் இடையே உள்ள இடைவெளி காரணமாக ரியல் எஸ்டேட் விலைகள் அதிகமாக இருப்பதை ரியல் எஸ்டேட் பொது ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி அப்துல்லா அல்ஹமத் ஒப்புக்கொண்டுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், வெளிநாட்டவர்கள் விரைவில் ரியல் எஸ்டேட் வைத்திருக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறினார். முதலீட்டாளர்களும் ரியல் எஸ்டேட் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அப்துல்லா, இன்று சொத்தின் விலை வாங்கும் சக்தியைவிட அதிகமாக இருப்பதாகத் தெரிவித்தார்.