7.5 மில்லியன் மரங்களுக்கு நீர்ப்பாசனம் செய்ய 1,350 கிமீ நீளமுள்ள நீர் நெட்வொர்க் திட்டங்களைப் பசுமை ரியாத் திட்டம், சவூதி தலைநகரில் செயல்படுத்துகிறது. நீர் வலையமைப்புத் திட்டங்கள் நாளொன்றுக்கு 1.7 மில்லியன் கனமீட்டர் சுத்திகரிக்கப்பட்ட நீரை பாசன நோக்கங்களுக்காகச் செயல்படுகிறது.
முக்கிய நெட்வொர்க்குகளின் விட்டம் 1.2 முதல் 2.4 மீட்டர்வரை இருக்கும், இது ரியாத்தின் அனைத்து சுற்றுப்புறங்களையும் இணைக்கும் துணை நெட்வொர்க்குகள் இருப்பதைக் குறிக்கிறது. செயல்படுத்தும் செயல்முறையைப் பொறுத்தவரை, சமீபத்திய தொழில்நுட்பங்கள் மற்றும் நடைமுறைகளுக்கு ஏற்ப ரியாத்தில் போக்குவரத்து இயக்கத்தைப் பாதிக்காத வகையில் இந்தத் திட்டம் செயற்படுத்தப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டு மற்றும் கண்காணிப்பு முறையைப் பயன்படுத்தி பாசன நீரை தொலைதூரத்தில் நிர்வகிக்க, சிறந்த நீர்ப்பாசன தொழில்நுட்பங்களை இது சார்ந்துள்ளது. 100% சுத்திகரிக்கப்பட்ட நீரைப் பயன்படுத்தி நீர்ப்பாசனத்தில் நிலைத்திருக்கும் கொள்கையின் அடிப்படையில், புதுப்பிக்கத் தக்க வளங்களிலிருந்து பயனடைவதற்கான திட்டத்தின் நோக்கத்தை உறுதிப்படுத்துகிறது. அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையைக் கொண்ட தொழில்நுட்பக் குழு ஒன்று பாசன நீர் அமைப்புகளைச் செயல்படுத்துவதில் உள்ள நெருக்கடிகளைச் சமாளிக்க உருவாக்கப்பட்டுள்ளது.
இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான், பட்டத்து இளவரசர் மற்றும் பிரதம மந்திரி முகமது பின் சல்மானின் முன்முயற்சியினால், ரியாத்தின் முக்கிய 4 திட்டங்களில் பசுமை ரியாத் திட்டமும் ஒன்றாகும். கிரீன் ரியாத் 7.5 மில்லியனுக்கும் அதிகமான மரங்களைச் சவூதி தலைநகரம் முழுவதும் நடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
குடியிருப்பு சுற்றுப்புறங்களில் காடு வளர்ப்பதன் மூலம் ரியாத்தின் நகர்ப்புற சூழலை மேம்படுத்தவும் இந்தத் திட்டம் முயல்கிறது. இது சவூதி பசுமை முன்முயற்சியின் (SGI) இலக்குகளில் ஒன்றையும், வரும் காலங்களில் சவூதிக்குள் 10 பில்லியன் மரங்களை நடவும் சவூதி விஷன் 2030 இன் இலக்குகளை அடையவும் பங்களிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.