சவூதி அரேபியாவில் வசிக்கின்ற வெளிநாட்டவர்களின் உறவினர்கள் இல்லாதவர்களுக்கும் விசிட் விசா வழங்கப்படும் என்றும் அதற்குச் சவூதி நாட்டின் ஏதேனும் ஒரு குடிமகன் பர்சனல் விசிட்டர் விசா வழங்க முடியும் எனவும், அதன் மூலம் அவர்கள் சவுதிக்குள் வரவும், உம்ராஹ் செய்யவும் முடியும் எனவும் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த விசா காலம் 90 நாட்கள் என்றும் சிங்கிள் என்ட்ரி விசா மற்றும் 365 நாட்கள் மல்டிபிள் என்ட்ரி விசா ஆகியவையும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு description இல் உள்ள இணைய முகவரியான https://visa.mofa.gov.sa தளம்மூலம் இந்த விசாவிற்கு விண்ணப்பிக்க முடியும் என்றும் ஹஜ் மற்றும் உம்ராஹ் அமைச்சகம் அறிவித்துள்ளது.