சவூதி மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் (MHRSD) மூலம் ஆவணப்படுத்தப்பட்ட பணி ஒப்பந்தங்களின் எண்ணிக்கை 358,440ஐ எட்டியுள்ளது. பணியாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையே நெகிழ்வான பணி ஒப்பந்தங்களை ஆன்லைன் இயங்குதளமானது ஆவணப்படுத்தியுள்ளது. இது மணிநேர அடிப்படையில் வேலைவாய்ப்பை வழங்குகிறது.
பொது விற்பனையாளர், மளிகை பொருட்கள் விற்பனையாளர், தொழில்நுட்ப சேவைகள் ஆலோசகர், உணவுச் சேவை மேற்பார்வையாளர், நிர்வாக உதவியாளர் எனப் பணி ஒப்பந்தங்களின் கீழ் வேலைவாய்ப்பு பெற்ற தொழில்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் மிகவும் பயனடைந்த செயல்பாடுகள் கட்டிடங்களின் பொதுவான கட்டுமானம், தளவாட சேவைகள், பொறியியல் ஆலோசனை நடவடிக்கைகள், ஆகியவை அடங்கும்.
வர்த்தகம், சில்லறை விற்பனை, விருந்தோம்பல், உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் ஆகிய துறைகள் மிகவும் நன்மை பயக்கும் நடவடிக்கைகளில் அடங்கியுள்ளது. சவூதி தொழிலாளர் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சவூதிகளின் அனைத்து வயதுப் பிரிவினரும் திட்டத்திலிருந்து பயனடையலாம்
வேலை தேடும் சவூதிகளுக்கு புதிய வேலைகளை உருவாக்குவதையும், அவர்களின் திறமை மற்றும் நிபுணத்துவத்தை மேம்படுத்தவும், ஃப்ளெக்சிபிள்-வேலைத் திட்டம் உதவுகிறது.
நாட்டின் விஷன் 2030 இன் நோக்கங்களை அடைய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மட்டத்தில் தேசிய பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு நெகிழ்வான வேலைத் திட்டம் பங்களிக்கும் என அமைச்சகம் கூறியுள்ளது.
இது சவூதிமயமாக்கலை ஆதரித்து, நாட்டின் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குகிறது, வேலையின்மை விகிதங்களைக் குறைப்பது , பெண் குடிமக்களுக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வேலையின்மை விகிதத்தைக் குறைப்பதோடு குடிமக்களின் பங்கேற்பு விகிதத்தை உயர்த்துவதையும், சட்டவிரோதமாக வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களின் சதவீதத்தைக் குறைப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.