Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் சவூதியில் நுகர்வோர் செலவு அதிகரித்துள்ளது.

சவூதியில் நுகர்வோர் செலவு அதிகரித்துள்ளது.

256
0

சவூதி அரேபியாவில் நுகர்வோர் செலவு 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரியால்120.6 பில்லியனை எட்டிய பிறகு 6% வளர்ச்சியடைந்துள்ளது, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், ரியால் 6.8 பில்லியன் வித்தியசாமாகும்.

ரியாத், மக்கா மற்றும் மதீனாவில் உள்ள விற்பனைப் புள்ளிகள் (POS) மூலம், நாட்டில் நுகர்வோர் செலவின் வளர்ச்சி சாதனை அளவை எட்டியுள்ளதாகச் சவூதி மத்திய வங்கியின் (SAMA) தரவுகளின் அடிப்படையில் அல்-எக்திசாதியா தெரிவித்துள்ளது.

POS விற்பனையில் 32% இருக்கும் ரியாத் நகரம், தற்போது 12.9% வளர்ச்சியடைந்துள்ளது, மக்கா மற்றும் மதீனாவில் செலவு சுமார் 32% மற்றும் 15% அதிகரித்துள்ளது.

Mada அட்டைகள் மற்றும் e-commerce மூலம் செய்யப்படும் செலவு சுமார் 11.2% ஆகும், இது அதிகபட்ச மாதாந்திர செலவாகக் கருதப்படுகிறது. மார்ச் 2023 இல் POS விற்பனை ஆண்டு அடிப்படையில் 8.7% வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.

2023 பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், ரியால்22.8 பில்லியன் அதாவது 23.3% அதிகரித்துள்ளது. பிஓஎஸ் மூலம் உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் மீதான நுகர்வோரின் செலவு 3.3% வளர்ச்சியை எட்டியுள்ளது. உணவு மற்றும் பானங்கள் துறையும் சுமார் 14.8% வளர்ச்சி கண்டுள்ளது.

ஆடைகள் மற்றும் காலணிகள் துறை, செலவின மதிப்பு ரியால்4.69 பில்லியன், மற்றும் கலாச்சாரத் துறையின் POS விற்பனை ரியால்1.3 பில்லியனைத் தாண்டியுள்ளது. பிஓஎஸ் பரிவர்த்தனைகள் மற்றும் ரொக்கப் பணம் எடுப்பதன் மூலம் ஈ-காமர்ஸ் மூலம் செலவழித்த மதிப்பு ரியால் 323.65 பில்லியன் ஆகும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!