சவூதி அரேபியாவில் ஒரே வாரத்தில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட 16 ஆயிரத்து 649 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவர்களில் 9,259 பேர் குடியுரிமை முறையை மீறியவர்கள், 4,899 பேர் எல்லை பாதுகாப்பு விதிகளை மீறியவர்கள் மற்றும் 2,491 நபர்கள் தொழிலாளர் சட்டங்களை மீறியவர்களாவர். குடியுரிமை மற்றும் பணி விதிமுறைகளை மீறியவர்களை ஏற்றிச் செல்வதிலும் அடைக்கலம் கொடுத்ததிலும் சட்டவிரோதமாக செயல்பட்ட 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.