Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் சவூதியில் ஒரு வாரத்தில் 10,710 சட்ட விரோதிகள் கைது.

சவூதியில் ஒரு வாரத்தில் 10,710 சட்ட விரோதிகள் கைது.

115
0

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒரு வாரத்திற்குள், ஜூன் 22 முதல் 28 வரை நாடு முழுவதும் பாதுகாப்புப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குடியுரிமை, தொழிலாளர் சட்டங்கள் மற்றும் எல்லைப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய சுமார் 10,710 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

6,070 பேர் குடியுரிமை முறையை மீறியதற்காக, 3,071 எல்லை பாதுகாப்பு விதிகளை மீறியதற்காகவும், தொழிலாளர்
சட்டங்களை மீறிய 1,569 நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 558 நாட்டின் எல்லையைக் கடக்க முயன்றபோது கைது செய்யப்பட்டனர்.49% ஏமனியர்கள், 48% எத்தியோப்பியர்கள் மற்றும் 3% பிற நாட்டினர், சவுதி அரேபியாவிலிருந்து வெளியேற எல்லையைக் கடக்க முயன்றபோது பிடிபட்டனர்.

குடியுரிமை மற்றும் பணி விதிமுறைகளை மீறியவர்களை அடைக்கலப்படுத்தியதற்காக 11 பேர் கைது செய்யப்பட்டனர். செய்யப்பட்டவர்களில் 28,072 ஆண்கள் மற்றும் 5,483 பெண்கள் ஆவர்.

பயண ஆவணங்களைப் பெறுவதற்காக 25,507தூதரகப் பணிகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டனர், பயண முன்பதிவுகளை முடிக்க 1,621 பரிந்துரைக்கப்பட்டனர், 6,274 பேர் நாடு கடத்தப்பட்டனர். ஒரு ஊடுருவல்காரர் நாட்டிற்குள் நுழைய அல்லது தங்குமிடம் அல்லது ஏதேனும் உதவி வழங்குபவர்களுக்கு 15 ஆண்டுகள்வரை சிறைத்தண்டனை மற்றும் அதிகபட்சமாக 1 மில்லியன் ரியால் அபராதம் விதிக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!