இணையத்தைப் பயன்படுத்தும் தனிநபர்களின் விகிதம் சவூதி அரேபியாவில் 94.3% உயர்ந்துள்ளது எனப் புள்ளிவிவரங்களுக்கான பொது ஆணையத்தின் (GASTAT) புல்லட்டின் தெரிவித்துள்ளது.நாட்டில் உள்ள குடும்பங்கள் மற்றும் தனிநபர்களுக்கான தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் செயல்பாடு குறித்த தரவு மற்றும் குறியீடுகளை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
15 வயது மேற்பட்டவர்கள் இணையத்தைப் பயன்படுத்துபவர்களின் விகிதம் 94.3℅ அதிகரித்துள்ளது, 2021 ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1.4% அதிகரித்துள்ளது. இதில் ஆண்களின் விகிதம் 95% மற்றும், பெண்களின் விகிதம் 93.3% ஆக உள்ளது. சதவீதம். சவூதியர்கள் 93.6% உள்ளனர், அதே சமயம் சவூதி அல்லாதவர்கள் 95.2% இணைய பயனர்களாக உள்ளனர்.
2022 இல் கணினியைப் பயன்படுத்திய 15 வயதிற்கு உட்பட்ட நபர்களின் விகிதம் 49.3%, சவூதியர்கள் 55.1%, சவூதி அல்லாதவர்கள் 40.08% இருப்பதாக தெரிவித்துள்ளது. 2022ல் மொபைல் போன் 97.7 % எட்டியுள்ளது. ஆண்களின் பயன்பாட்டு விகிதம் 92.9%, பெண்களின் பயன்பாட்டு விகிதம் 92.6% உள்ளது.
இணையம் வழியாக பொருட்கள் வாங்கியவர்களின் விகிதம் 59.7% எட்டியுள்ளது. இதில் ஆண்களின் சதவீதம் 58.8% ஆக இருந்தது. ஷூக்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் இணையத்தின் மூலம் அதிகளவில் கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களாகும், 77.2 % ஆகும்.