சவூதி அரேபியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2023 இன் இரண்டாவது காலாண்டில் 1.1 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது எனப் புள்ளிவிவரங்களுக்கான பொது ஆணையம் (GASTAT) சமீபத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான GDP மதிப்பீடுகள் 2022 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு எண்ணெய் அல்லாத நடவடிக்கைகளில் 5.5 சதவிகிதம் அதிகரித்தும், அதே நேரத்தில் எண்ணெய் நடவடிக்கைகளில் 4.2 சதவிகிதம் குறைந்துள்ளதாகச் சவுதி பத்திரிகை நிறுவனம் தெரிவித்துள்ளது.
GASTAT சவூதி அரேபியாவில் புள்ளிவிவர தரவு மற்றும் தகவல்களுக்கான ஒரே அதிகாரப்பூர்வ அமைப்பாகும். இது புள்ளியல் துறையின் அனைத்து புள்ளிவிவரம் மற்றும் தொழில்நுட்பங்களை மேற்பார்வையிட்டு புள்ளிவிவர ஆய்வுகள், ஆராய்ச்சிகள், தரவு மற்றும் தகவலைப் பகுப்பாய்வு செய்து அதிலிருந்து தரவுகளைச் சரிபார்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.