சர்வதேச நாணய நிதியம் (IMF) சவூதி அரேபியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான மதிப்பீடுகளை (மொத்த உள்நாட்டு உற்பத்தி -GDP) 2024 இல் நான்கு சதவீதமாக உயர்த்தியுள்ளது.
2023 இல் சவூதியின் பொருளாதார வளர்ச்சிக்கான அதன் முன்னறிவிப்பை 1.1 சதவீதத்திலிருந்து 0.8 சதவீதமாகக் குறைத்துள்ளதாக IMF சமீபத்திய உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையில் வெளியிட்டுள்ளது.
உலகப் பொருளாதார வளர்ச்சி 2022ல் 3.5 சதவீதத்திலிருந்து இந்த ஆண்டு 3 சதவீதமாகவும், அடுத்த ஆண்டு 2.9 சதவீதமாகவும் குறையும் எனவும், 2022ல் 8.7 சதவீதமாக இருந்த உலகப் பணவீக்கம் இந்த ஆண்டு 6.9 சதவீதமாகவும், பின்னர் 2024ல் 5.8 சதவீதமாகவும் இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.
COVID-19, உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு மற்றும் கடந்த ஆண்டு எரிசக்தி நெருக்கடி ஆகியவற்றிலிருந்து உலகப் பொருளாதாரம் தொடர்ந்து மீண்டு வருவதாக அறிக்கை குறிப்பிட்டது.