கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் சவுதி அரேபியாவின் ஜிடிபி முதற் காலாண்டில் 3.8% அதிகரித்துள்ளது என்று புள்ளிவிவரங்களுக்கான பொது ஆணையம் (GASTAT) தெரிவித்துள்ளது.
இந்த ஆணையத்தால் வெளியிடப்பட்ட இந்த ஆண்டின் முதற் காலாண்டிற்கான GDP மதிப்பீடுகள், எண்ணெய் அல்லாத நடவடிக்கைகளில் 5.4% அதிகரிப்பு, அரசாங்க நடவடிக்கைகளில் 4.9% அதிகரிப்பு மற்றும் 2022 ஆம் ஆண்டின் முதற் காலாண்டை விட எண்ணெய் நடவடிக்கைகளில் 1.4% அதிகரிப்பு என்று தெரியப்படுத்தியுள்ளது.
சவூதி அரேபியாவில் புள்ளிவிவர தரவு மற்றும் தகவல்களுக்கான ஒரே அதிகாரப்பூர்வ குறிப்பு GASTAT ஆகும். இது அனைத்து புள்ளியியல் பணிகளையும், அத்துடன் புள்ளியியல் துறையின் தொழில்நுட்ப மேற்பார்வையையும் மேற்கொள்கிறது. இது கள ஆய்வுகளை வடிவமைத்துச் செயல்படுத்துவதோடு புள்ளியியல் ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சிகளை நடத்துகிறது.மேலும் தரவு மற்றும் தகவல்களைப் பகுப்பாய்வு செய்வதோடு சவூதி அரேபியாவில் அனைத்து அம்சங்களிலும் தகவல் மற்றும் புள்ளிவிவரத் தரவைக் கொண்ட அனைத்து படைப்புகளையும் ஆவண படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.