Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் சவூதியின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என்பதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சிவில் பாதுகாப்பு துறை...

சவூதியின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யும் என்பதால், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சிவில் பாதுகாப்பு துறை கேட்டுக்கொண்டுள்ளது.

104
0

சவூதி அரேபியாவின் பெரும்பாலான பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழன் வரை மிதமானது முதல் கனமழை வரை பெய்யும் என்பதால், மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்கும்படி குடிமைத் தற்காப்பு இயக்குநரகம் எச்சரித்துள்ளது.

மக்காவின் தாயிஃப், ஆதம், அல் அர்தியத், மற்றும் அசிர், அல்-பஹா, ஜிசான், நஜ்ரான் மற்றும் மதீனா உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை மற்றும் ஆலங்கட்டி மழை பெய்யும். அல் ஜும், பஹ்ரா, அல் குன்ஃபுதா, அல் லித், அல் முவே, அல் குர்மா, ரன்யா மற்றும் துர்பா உள்ளிட்ட மக்கா பகுதியில் லேசானது முதல் மிதமான மழை மற்றும் தூசி நிறைந்த காற்று வீசக்கூடும்.

ரியாத், அஃபிஃப், அல் துவாதிமி, அல் குவையா, அர் ரெயின், அஸ் சுல்பி, அல் மஜ்மா, அல் காத், ஷக்ரா, ஹுரைமிலா, ரூமா, ஜித்தா, குலைஸ், ரபிக், அல்-காசிம், மதீனா, தபூக் உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

மழைக் காலங்களில் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும், நீரோடைகள் போன்ற இடங்களில் நீந்துவது ஆபத்தாக முடியும் எனச் சிவில் பாதுகாப்புப் பிரிவினர் எச்சரித்துள்ளனர். சமூக ஊடக தளங்கள் மூலம் அறிவிக்கப்பட்ட அறிவுறுத்தல்களை அனைவரும் பின்பற்றுமாறும் குடிமைத் தற்காப்பு அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!