21ஆம் நூற்றாண்டில் வெற்றியின் மையமாகச் சவூதி நிலைநிறுத்தப்படும் என்றும், வெற்றிக்கான தொலைநோக்கு அணுகுமுறை மற்றும் எல்லையற்ற சாத்தியக் கூறுகளின் எதிர்காலத்தில் உறுதியான நம்பிக்கை ஆகியவை சவூதி அரேபியாவின் நிலையை உயர்த்துவதற்கான தூண்டுகோள் என்றும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அவர்கள் கூறியுள்ளார்.
பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அவர்கள் ஃபாக்ஸ் நியூஸ் உடனான சமீபத்திய நேர்காணலில் சவுதி அரேபியாவின் தேசியப் பயணம் மற்றும் அதன் முன்னோக்கியப் பாதையில் கவனம் செலுத்துகிறது என்றும் கூறியுள்ளர்
வளர்ச்சி வேகத்தில் முன்னேறிய நாடுகளுடன் போட்டியிட்டு, ஜி20 நாடுகளில் சவூதி அரேபியா அதிவேக பொருளாதார வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாகவும், மேலும் சுற்றுலா, விளையாட்டு, பொழுதுபோக்கு மற்றும் கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சவூதி மிக விரைவான வளர்ச்சி அடைந்து வருகிறது என்றும் சவுதி அரேபியாவின் குறிப்பிடத் தக்க முன்னேற்றத்தை வெளிப்படுத்தும் நம்பிக்கைக்குரிய குறிகாட்டிகளை பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அவர்கள் மேற்கோள் காட்டி பேசினார்.
சவூதி அரேபியாவின் விஷன் 2030 அதன் மாற்றத்தின் மையமாகச் செயல்பட்டு ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிப்பதோடு, அதன் இலக்குகள் விரைவாக அடையப்பட்டு வருவதாகவும் வலியுறுத்திக் குறிப்பிட்டார்.
சவூதி அரேபியாவின் புதிய கட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து அதன் பாதையானது துணிச்சலான முடிவுகள், அசைக்க முடியாத உறுதிப்பாடு மற்றும் தொலைநோக்கு இலக்குகளை அடைவதில் உறுதியான அர்ப்பணிப்பு ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகிறது.
சவூதி அரேபியா நம்பிக்கையுடனும் தெளிவாகவும் சரியான பொருளாதாரப் பாதையில் முன்னேறி உலக அளவில் முதல் ஏழு பொருளாதாரங்களில் இடம்பிடிக்கத் தயாராக உள்ளது எனக் குறிப்பிட்டார்.
சுற்றுலா முதலீடுகளைப் பொறுத்தவரை, 40 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் பங்களிப்பு 3% இலிருந்து 7% ஆக உயர்ந்துள்ளது, அதே சமயம் விளையாட்டுத் துறையும் நேர்மறையான முன்னேற்றங்களைக் கண்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல்வேறு துறைகளில் முன்னேற்றங்களைக் கூர்ந்து கண்காணித்து, தீவிர முயற்சிகளுடன் அவற்றை மறுபரிசீலனை செய்தல் மற்றும் புத்துயிர் அளிப்பது, சவூதி அரேபியாவை விரிவான வளர்ச்சியை நோக்கித் தூண்டுவதோடு, தேசிய மாற்றப் பயணத்துடன் இணைப்பதாகப் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மேலும் கூறினார்.