வியாழக்கிழமை நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சவூதி அரேபியாவின் எண்ணெய் அல்லாத வருவாய் 13 சதவீதம் உயர்ந்து 135.08 பில்லியன் ரியால்களாக உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 120 பில்லியன் ரியால்களாக இருந்தது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் சுமார் 250.36 பில்லியன் ரியால்களாக இருந்த எண்ணெய் வருவாய் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 28% சரிந்து 179.74 பில்லியன் ரியால்களாக உள்ளது.
2023 இன் முதல் பாதியில் மொத்த எண்ணெய் வருவாய் 358.3 பில்லியன் ரியால்களாக இருந்த்து, 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 17% குறைந்துள்ளது. ஆண்டின் முதல் பாதியில் மொத்த வருவாய் சுமார் ரியால் 595.8 பில்லியன் ஆகும் , மொத்த செலவுகள் சுமார் 603.95 பில்லியன் ரியால்கள். செலவுகளுடன் ஒப்பிடுகையில், 8.18 பில்லியன் ரியால் பற்றாக்குறையை பதிவு செய்துள்ளது.
சவூதி வரவு செலவுத் திட்டம் 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் ரியால் 314.82 பில்லியன் மொத்த வருவாயைப் பதிவு செய்துள்ளது, இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் மொத்த செலவினங்களுடன் ஒப்பிடுகையில் ரியால் 320.09 பில்லியனாக இருந்தது.
2022 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மொத்த வருவாய் 15% குறைந்துள்ளது. 2023 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் வரவு செலவுத் திட்டத்தில் மொத்த செலவுகள் சுமார் 9% அதிகரித்து சுமார் 320 ரியால் ஆக உள்ளது.