வேலைவாய்ப்பு சந்தையின் உள்ளூர்மயமாக்கல் முடிவுகளும்,
மூலோபாய முயற்சிகளும் 2025 இறுதிக்குள் முடிக்கப்படும் என மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் இன்ஜி. அஹ்மத் அல்-ராஜி வலியுறுத்தியுள்ளார். 2019 முதல் 500,000 க்கும் மேற்பட்ட குடிமக்களுக்குத் தனியார் துறையில் வேலைகளை உருவாக்கியதில் உள்ளூர்மயமாக்களின் முடிவுகள் முக்கிய பங்கு வகித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற சவூதி பொருளாதார சங்கத்தில் “சவூதி வேலைவாய்ப்பு சந்தையில் மூலோபாய மாற்றங்கள்” என்னும் தலைப்பில் பேசிய அமைச்சர்,2025 ஆம் ஆண்டிற்குள் பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்காகத் திட்டமிடப்பட்ட அனைத்து இலக்குகளும் 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு உற்பத்தியை (ஜிடிபி) அதிகரிப்பதில் ஃப்ரீலான்ஸ், ஃப்ளெக்சிபிள் , ரிமோட் ஆகிய வேலை முறைகள் பங்கேற்பதற்கும், பல்கலைக்கழக மாணவர்களுக்கு வருமான ஆதாரங்களை அதிகரிக்கவும் இந்தத் திட்டம் பங்களிக்கும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பங்கேற்பு மின்னணு தளங்களை மீறும் தொழிலாளர்களைக் கட்டுப்படுத்தி, சவூதிகளுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதே தங்கள் குறிக்கோள் எனவும்,சவூதி இளைஞர்கள் வேலைக்குத் தகுதி பெறுவதற்கான உத்திகள், திட்டங்கள், முன்முயற்சிகள், தேவைகள் மற்றும் திறன்களுக்கு ஏற்ப இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பின்தொடர வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
இதில் வேலையின்மை விகிதம், தொழிலாளர் பங்கேற்பு விகிதம், வேலையில் தனியார் துறை பங்கு விகிதம், மனித மூலதனக் குறியீட்டில் தரவரிசை, உயர்கல்வி பட்டதாரிகளின் வேலைவாய்ப்பு விகிதம் ஆகிய செயல்திறன்களை அளவிடும் பல குறியீடுகள் உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.