Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் சவுதி இளவரசர் விளையாட்டுக் கிளப்களுக்கான முதலீடு மற்றும் தனியார்மயமாக்கல் திட்டத்தை வெளியிட்டார்.

சவுதி இளவரசர் விளையாட்டுக் கிளப்களுக்கான முதலீடு மற்றும் தனியார்மயமாக்கல் திட்டத்தை வெளியிட்டார்.

195
0

சவுதி இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான், விளையாட்டுக் கழகங்களுக்கான ஒரு பன்னோக்கு முதலீடு மற்றும் தனியார்மயமாக்கல் திட்டத்தை அதன் முதல் கட்டத்திற்கான நிர்வாக நடைமுறைகளை முடித்தபின்னர் திங்களன்று வெளியிட்டார்.

இதன் மூலம் பெரிய நிறுவனங்கள் மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களுக்குக் கிளப் உரிமையை மாற்றுவதற்கு பதில் விளையாட்டுக் கழகங்களில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படும். மேலும், 2023 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் தனியார்மயமாக்கலுக்கு பல விளையாட்டுக் கழகங்கள் உட்படுத்தப்படும். இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தில் இரண்டு தடங்களின் கீழ் இவை செயல்படுத்தப்படும் என்று சவுதி பிரஸ் ஏஜென்சி தெரிவித்துள்ளது.

சவூதி புரொபஷனல் லீக்கை உலகின் 10 சிறந்த தொழில்முறை லீக் பட்டியலில் கொண்டு வருவதற்கான இலக்கை நனவாக்குவதும், அதன் சந்தையை உயர்த்துவதுடன், லீக்கின் வருவாயை ஆண்டுதோறும் சவூதி ரியால் 450 மில்லியனில் இருந்து சவூதி ரியால் 1.8 பில்லியனுக்கும் அதிகமாக உயர்த்துவதும் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

தனியார் பங்குதாரர்களை ஊக்குவித்து, துறையின் வளர்ச்சிக்கு பங்களிக்க உதவுவதன் மூலம் பயனுள்ள விளையாட்டுத் துறையை உருவாக்கவும் சவூதி விஷன் 2030 இன் இலக்குகளை அடைவதையும் இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. சவூதி தேசிய அணிகள், விளையாட்டுக் கழகங்கள் மற்றும் விளையாட்டுப் பயிற்சியாளர்கள் அனைத்து மட்டங்களிலும் சிறப்பான தகுதியை அடைவதே இதன் ஒட்டுமொத்த நோக்கமாகும்.

பொதுவாகக் கிளப்புகளின் பரிமாற்றம் மற்றும் தனியார்மயமாக்கல் 2030 ஆம் ஆண்டிற்குள் நாட்டில் பல்வேறு விளையாட்டுத் துறைகளில் தரமான முன்னேற்றத்தை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இது பிராந்திய மற்றும் உலக அளவில் விளையாட்டுகளில் ஒரு சிறந்த தலைமுறையை உருவாக்குகிறது. குறிப்பாக இது கால்பந்து விளையாட்டு மற்றும் அதன் போட்டிகளை வளர்ப்பதற்கு கூடுதல் அனுகூலமாக உள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!