குடியுரிமை, தொழிலாளர் சட்டங்கள் மற்றும் எல்லைப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய சுமார் 11,614 பேர் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒரு வாரத்திற்குள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உள்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, மே 25 முதல் 31 வரையிலான வாரத்தில் நாடு முழுவதும் பாதுகாப்புப் படைகளின் பல்வேறு பிரிவுகளால் மேற்கொள்ளப்பட்ட கூட்டு தேடுதலின் போது கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 6,738 நபர்கள் குடியுரிமை முறையை மீறியவர்களும், 3,618 நபர்கள் எல்லை பாதுகாப்பு விதிகளை மீறியவர்களும், 1,258 நபர்கள் தொழிலாளர் சட்டங்களை மீறியவர்களும் ஆவர்.
மேலும் 654 பேர் நாட்டிற்குள் எல்லையைக் கடக்க முயன்றபோது கைது செய்யப்பட்டனர், 41% ஏமனியர்கள், 55% எத்தியோப்பியர்கள் மற்றும் 4% பிற நாட்டினர் ஆவர்.
குடியுரிமை மற்றும் பணி விதிமுறைகளை மீறியவர்களைக் கொண்டு செல்வதிலும் அடைக்கலப்படுத்துவதிலும் மூடிமறைக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்ட 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் ஊடுருவல்காரர்களுக்கு உதவி புரிபவர்களுக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அதிகபட்சமாக 1 மில்லியன் சவூதி ரியால்கள் அபராதம் விதிக்கப்படும் என்றும் உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.