Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் சவால்களை எதிர்கொள்ள கூட்டு நடவடிக்கையை நாடும் சவூதி இளவரசர்

சவால்களை எதிர்கொள்ள கூட்டு நடவடிக்கையை நாடும் சவூதி இளவரசர்

109
0

கடந்த புதன்கிழமை, வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (ஜி.சி.சி) மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் உச்சி மாநாட்டைத் தொடங்கி வைத்த சவூதி இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான், உலகம் எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ளக் கூட்டு நடவடிக்கையைக் கோருவதாக உறுதிப்படுத்தினார். நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை அடைவதற்கு வளைகுடா மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்டுவதன் அவசியத்தை வலியுறுத்தினார்.

முதல் வளைகுடா-மத்திய ஆசிய உச்சி மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய இளவரசர் முகமது பின் சல்மான், இந்த மாநாடு GCC மாநிலங்களுக்கும் மத்திய ஆசிய நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வெளிப்படுத்துவதாகக் கூறியுள்ளார். உணவு விநியோகச் சங்கிலிகளைப் பாதிக்கும் அனைத்தையும் எதிர்கொள்ளும் முயற்சிகளைத் தீவிரப்படுத்துவதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் சார்பாக, அவர்களை வரவேற்றார். உச்சிமாநாடு உறவுகளின் விரிவாக்கமாகவும், வரலாற்று பாரம்பரியம், திறன்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் ஒரு நம்பிக்கைக்குரிய தொடக்கத்தை ஏற்படுத்தும் எனக் குறிப்பிட்டார்.

2030 உலக கண்காட்சியை ரியாத்தில் நடததும் சவூதியின் முயற்சிக்கு ஆதரவளிக்கும் மத்திய ஆசிய நாடுகளை இளவரசர் பாராட்டியுள்ளார்.உச்சிமாநாடு வளைகுடா மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் தலைவர்களின் உறவுகளை மேம்படுத்துவதன் பொதுவான விருப்பத்தைப் பிரதிபலிக்கிறது என உச்சிமாநாட்டில் உரையாற்றிய குவைத் பட்டத்து இளவரசர் ஷேக் மிஷால் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா கூறினார்.

மத்திய ஆசிய நாடுகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார். வளைகுடா நாடுகளின் பாதுகாப்பை வலுப்படுத்த மத்திய ஆசிய நாடுகளின் ஆர்வத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்தார்.

கத்தார் எமிர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்தானி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணைத் தலைவர், உஸ்பெகிஸ்தான் அதிபர், கிர்கிஸ்தான் அதிபர், கஜகஸ்தான் அதிபர் எனப் பலர் உச்சிமாநாட்டில் கலந்துகொண்டனர்.சவூதி இளவரசர் முகமது பின் சல்மான் மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகள், தலைவர்களை வரவேற்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!