ஞாயிற்றுக்கிழமை முதல் சமையல் எரிவாயு அல்லது திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) விலையில் சிலிண்டருக்கு SR1 அதிகரிப்பதாகத் தேசிய எரிவாயு மற்றும் தொழில்மயமாக்கல் நிறுவனம் (GASCO) அறிவித்துள்ளது. மேலும் சவூதி பங்குச் சந்தையின் தளத்தில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், ஜூன் 11, ஞாயிற்றுக்கிழமை முதல் எல்பிஜி விற்பனை விலையில் மாற்றம் செய்வது குறித்து எரிசக்தி அமைச்சகத்திடமிருந்து கடிதம் வந்துள்ளதாகக் காஸ்கோ தெரிவித்துள்ளது.
புதிய எரிவாயு சிலிண்டரை நிரப்புவதற்கான விலைகள் மதிப்பு கூட்டப்பட்ட வரி (VAT) உட்பட SR19.85ஐ எட்டியது, மற்றும் விநியோக நிலையங்களிலிருந்து விற்பனை நிலையங்களுக்குப் போக்குவரத்து கட்டணங்கள் நீங்கலாகத் தற்போதைய விலை மாற்றங்கள் எதிர்காலத்தில் நிறுவனத்தின் நிகர வருமானத்தில் குறிப்பிடத் தக்க நிதி தாக்கத்தை ஏற்படுத்தாது என்று காஸ்கோ தெரிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.