Home செய்திகள் சவூதி அரேபிய செய்திகள் சமூக வலைதள ஆடியோ மூலம் வெறுப்பு பிரச்சாரம் – குடிமகன் ஒருவர் கைது.

சமூக வலைதள ஆடியோ மூலம் வெறுப்பு பிரச்சாரம் – குடிமகன் ஒருவர் கைது.

124
0

சவுதி அரேபியாவின் ஒரு பகுதியைச் சமூக ஊடகங்களின் ஆடியோ தளம் மூலமாக அவமதித்ததற்காக ரியாத் பிராந்திய காவல்துறை ஒரு குடிமகனைச் சனிக்கிழமை கைது செய்தது.

குடிமகன் பொது ஒழுங்கைப் பாதிக்கக்கூடிய மற்றும் கலாச்சார கலவரத்தைத் தூண்டும் ஆடியோ பதிவினை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதை போலீசார் உறுதி செய்தனர்.

குறித்த பிரஜையைக் கைது செய்யுமாறு அட்டர்னி ஜெனரலும், பப்ளிக் பிராசிகியூஷன் கவுன்சிலின் தலைவருமான ஷேக் சவுத் அல் முஜாப் உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

பிராந்தியத்தில் நடந்த இந்த வெறுப்பு சம்பவம் மற்றும் பிற தளங்களில் உள்ளடக்கங்களைத் தொடர்ந்து வெளியிடும் இந்த நபரின் கலாச்சார பாகுபாடு குறித்து வழக்குத் தொடர்பாளர் சமர்ப்பித்ததன் அடிப்படையில் அட்டர்னி ஜெனரலின் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்று பொது வழக்கறிஞரின் அதிகாரப்பூர்வ ஆணையம் தெரிவித்துள்ளது.

வழக்கமான நடைமுறைகளை முடிக்கக் குடிமகனை பொது வழக்கறிஞருக்கு அனுப்பவும், அவருக்கு எதிராகக் கிரிமினல் வழக்கைத் தொடங்கவும், அவரைத் தகுதிவாய்ந்த நீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பதற்கும், அவரது துஷ்பிரயோகத்திற்கு கடுமையான தண்டனைகளைக் கோருவதற்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இது போன்ற தேசிய ஒருமைப்பாடு மற்றும் சமூக அமைதிக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய அனைத்திற்கும் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்று நீதி ஆணையம் தெரிவித்தது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!