கோடை காலம் தொடங்கும் என்று அறிவிக்கும் வசந்த காலம் முடிய உள்ளதாகத் தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) வானிலை ஆய்வாளர் அகீல் அல்-அகீல் தெரிவித்தார்.
சவூதி அரேபியாவின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளிக்கிழமை முதல் இடியுடன் கூடிய மழை பெய்து அடுத்த செவ்வாய் வரை நீடிக்கும் என்றும் NCM முன்னதாக அறிவித்த வசந்த காலநிலை மற்றும் மழையின் தொடர்ச்சியை அல்-அகீல் எதிர்பார்க்கிறார்.
ரியாத்தின் ஒரு பகுதி வானிலையால் பாதிக்கப்படும் என்றும் மழையின் பெரும்பகுதி மலைப்பகுதிகளில் கவனம் செலுத்தும் என்றும் அல்-அகீல்குறிப்பிட்டார்.
மழைக் காலங்களில் அனைவரும் பாதுகாப்பான இடத்தில் தங்குமாறும்,வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் இடங்களுக்கு மக்கள் செல்வதை தவிர்க்குமாறும், நீந்துவதற்குப் பொருத்தமற்ற இடங்களில் நீச்சலடிக்க வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை தனது தளங்கள் மூலம் கடைப்பிடிக்குமாறும் சிவில் பாதுகாப்பு பிரிவு அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.