உடலில் சிலருக்கு கொழுப்புக் கட்டிகள் தோன்றும். இதனை லிபோமா என்று அழைப்பார்கள். இவை பெரும்பாலும் கழுத்து, அக்குள், தொண்டை, கைகளின் மேற்புறம் போன்ற இடங்களில் தோன்றும்.
மரபணுக்கள், உடல் பருமன் அல்லது அதிகப்படியான கொலஸ்ட்ரால் போன்றவற்றால் வர வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
இந்தக் கட்டிகளைப் போக்க அறுவை அல்லது லேசர் சிகிச்சைகளைத் தான் மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். ஆனால் இந்த கொழுப்புக் கட்டி கரைய இயற்கை வழிமுறைகள் உள்ளது.
💊கொழுப்பு கட்டிகள் கரைய தினமும் #ஆரஞ்சு பழத்தை அதிகளவு உட்கொள்ளவும். குறிப்பாக விதையுள்ள ஆரஞ்சு பழங்களை மட்டுமே உண்ண வேண்டும். கட்டி நன்றாகக் கரையும் வரை சாப்பிடவும்.
💊ஒரு பருத்தி துணியில் சிறிது கல்லுப்பை போட்டு முடிந்து கொண்டு நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய்யில் அந்த முடிப்பை தோய்த்து ஒரு தோசைக்கல்லில் சூடேற்றி அதில் இந்த முடிப்பை வைத்து, தாங்கும் அளவுக்குச் சூடேற்றி கொழுப்பு கட்டிகளின் மீது ஒத்தடம் கொடுத்து வரவேண்டும்.
💊கொடிவேலி என்பது ஒரு சிறந்த மருத்துவ மூலிகையாகும். இந்த மூலிகையால் செய்யப்பட்ட தைலம் சித்த மருந்து கடைகளில் கிடைக்கும். இதை வாங்கி நம் உடலில் கொழுப்புக் கட்டிகள் உள்ள இடங்களில் தடவி வர அக்கட்டிகள் மறையும்.