கொக்கைன் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட சவூதி அரேபியர்கள் மூவர் மற்றும் நைஜீரியர் ஒருவர் உட்பட ஒரு கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டு,அவர்களிடமிருந்து சுமார் 2.2 கிலோகிராம் கொக்கெய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது.
ரியாத் நகரிலும், ஜித்தா கவர்னரேட்டிலும் 2.2 கிலோகிராம் கோகோயின் கடத்தல் மற்றும் விற்பனை முயற்சியை முறியடித்ததாக ரியாத் காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது.
ரியாத் போலிசார் கோகோயின் அளவு மற்றும் குறிப்பிட்ட ஒரு தொகை பணத்தை கைப்பற்றியதோடு,கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அவர்கள் உரிய அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டதாக கூறியுள்ளனர்.
மக்கா, ரியாத் மற்றும் கிழக்கு மாகாணங்களில் 911 என்ற எண்ணிலும், சவுதியின் பிற பகுதிகளில் 999 என்ற எண்ணிலும் போதைப்பொருள் கடத்தல் அல்லது விற்பனை தொடர்பான சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் குறித்து தகவல் தெரிவிக்குமாறு சவுதி குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு பாதுகாப்பு அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
மேலும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பொது இயக்குநரகத்திற்கு (GNDC) 995 என்ற எண் அல்லது 995@gdnc.gov.sa என்ற மின்னஞ்சல் மூலம் புகாரளிக்குமாறும், இதுபோன்ற புகார்கள் அனைத்தும் ரகசியமாக கருதப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.