கிஸ்வாவை (காபாவின் போர்வையை) தயாரிக்க தொழிற்சாலை இயந்திரங்கள்மூலம் முயறச்சித்து ஆனால் அது கைத்தறி முறை எம்பிராய்டரியை மிஞ்ச முடியவில்லையெனப் புனித காபாவின் கிஸ்வா தொழிற்சாலையில் 39 வருட அனுபவமுள்ள ஜக்கி கஸ்ஸார் என்ற ஜவுளித் தொழிலாளி தெரிவித்துள்ளார்.கைத்தறி எம்பிராய்டரி செயல்முறை ஒரு சிறந்த கலையென, சவூதி அரசுத் தகவல் தொடர்பு மையம் (CGC) வெளியிட்ட காணொளியில் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் காபாவை பார்த்ததும் மகிழ்ச்சியில் மக்கள் அழத் தொடங்குகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
கிஸ்வாவில் எம்ப்ராய்டரி செய்த முதல் ஊசி கஸ்ஸரின் இதயத்தில் புத்துணர்ச்சியை ஏற்படுத்தியதாகக் கூறியுள்ளார். 2023 ஹஜ்ஜின்போது, ஏராளமான பயணிகள் தொழிற்சாலைக்கு வருகை தந்தனர். முஹம்மது ஷாஃபி, ஆபிரிக்க ஹஜ் பயணி கிஸ்வாவைத் தொட்டு ஜவுளி எம்பிராய்டரியை அனுபவித்த பிறகு அது ஒரு அழகான உணர்வு என்று கூறியுள்ளார்.
அடுத்த ஆண்டு தனது குடும்பத்துடன் மக்காவில் உள்ள பெரிய மசூதியில் உள்ள காபாவை பார்வையிடவும், கிஸ்வாவின் திகைப்பூட்டும் அழகை எம்ப்ராய்டரி செய்வதில் பங்களிப்பவர்களில் ஒருவராக இருந்ததைக் காணவும் காத்திருக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.உம்மு அலி, போஸ்னிய ஹஜ் பயணி தொழிற்சாலைக்குள் நுழைந்ததும், காபாவின் இந்த போர்வைத்துணியை பார்த்ததும் அழ ஆரம்பித்துவிட்டதாகவும், தன் குழந்தைகளுடன் காபாவை மீண்டும் பார்க்க விரும்புவதாகவும் கூறினார்.
மே 2017 இல், மக்காவில் உள்ள புனித காபாவின் கிஸ்வா தொழிற்சாலையின் பெயரைப் புனித காபா கிஸ்வாவுக்கான மன்னர் அப்துல் அஜீஸ் வளாகம் என்று மாற்றுவது தொடர்பாக மன்னர் சல்மானின் ஒப்புதல் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
புனித காபாவின் கிஸ்வா, செலவு தற்போது சவூதி ரியால் 20 மில்லியனைத் தாண்டி 850 கிலோகிராம் எடையும் கொண்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பட்டு, தங்கம் மற்றும் வெள்ளி நூல்களால் நெய்யப்பட்டு எம்ப்ராய்டரி
செய்யப்படுகிறது. காபாவை அலங்கரிக்கும் கில்டட் துண்டுகளின் எண்ணிக்கை 54 ஐ எட்டியுள்ளது, மேலும் இது 120 கிலோகிராம் கில்டிங், 100 கிலோகிராம் தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி மற்றும் 760 கிலோகிராம் பட்டு ஆகியவற்றைப் பயன்படுத்தி செய்யப்படுகிறது.