இனிப்புப் பெட்டிகளுக்குள் சுமார் 2,242,560 கேப்டகன் வகை போதை மாத்திரைகளை மறைத்து வைத்துத் துறைமுகம் வழியாகச் சவூதி அரேபியாவிற்கு கடத்த முயன்றதை ஜித்தா இஸ்லாமிய துறைமுகத்தில் உள்ள ஜகாத், வரி மற்றும் சுங்க ஆணையம் (ZATCA) வெற்றிகரமாக முறியடித்துள்ளது.
சுங்க நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டு, பரிசோதனைக்குப் பின், இனிப்பு பெட்டிகளின் அடியில் கேப்டகன் மாத்திரைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடிக்கப்பட்டதாக ZATCA தெரிவித்துள்ளது. சந்தேகத்தின் அடிப்படையில் இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுங்க விற்பனை நிலையங்கள் இறக்குமதிகள் மற்றும் ஏற்றுமதிகள் மீதான சுங்கக் கட்டுப்பாட்டைத் தொடர்ந்து கண்காணித்து, அனைத்து குற்றச் செயல்களிலிருந்து சமூகத்தைப் பாதுகாத்து கடத்தல் முயற்சிகளை எதிர்கொள்வதாக ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
கடத்தல் குற்றங்கள் மற்றும் ஒருங்கிணைந்த சுங்க விதிகளை மீறுவது தொடர்பான அறிக்கைகளை (1910) அல்லது மின்னஞ்சல்: 1910@zatca.gov.sa இணைய வாயிலாக அல்லது (00966114208417) என்ற எண் மூலம் தொடர்புக் கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாமென ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும் சமூகம் மற்றும் தேசிய பொருளாதாரத்தை பாதுகாத்து கடத்தலை எதிர்த்துப் போராட பங்களிக்குமாறு பொது மக்களுக்கு ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது மற்றும் சரியான தகவல் தெரிவித்தால் தக்க சன்மானம் வழங்கப்படும் எனபதும் குறிப்பிடத்தக்கது.