இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் மன்னர் சல்மான் தலைமையில் NEOM இல் நடைபெற்ற அமைச்சரவையில் உலகெங்கிலும் உள்ள நீர் சவால்களை எதிர்கொள்ளச் சர்வதேச பலதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், அவற்றைச் சமாளிப்பதற்கு முன்முயற்சி எடுப்பதற்கும் சவூதி மேற்கொண்ட முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலர் கடந்த நாட்களில் பல்வேறு துறைகளில் சவூதியுடன் உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் தொடர்பாகப் பல நாடுகளின் தலைவர்களுடன் நடந்த உரையாடல்களின் விவரங்களை அமைச்சரவைக்கு விளக்கினார்.
அமர்வைத் தொடர்ந்து சவூதி செய்தி நிறுவனத்திற்கு (SPA) ஊடகத்துறை அமைச்சர் சல்மான் பின் யூசுப் அல்-தோசாரி அளித்த அறிக்கையில், சவூதி அரேபியாவையும் சகோதர நாடுகளையும் ஒன்றிணைக்கும் சிறப்புமிக்க உறவுகள் மற்றும் வரலாற்றுப் பிணைப்புகளைக் கருத்தில் கொண்டு கூட்டுப் பணியை மேலும் முன்னேற்றுவதற்கு அமைச்சரவை எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
இத்தாலிய தரப்புடன் கலந்துரையாடி எரிசக்தி துறையில் ஒத்துழைப்புக்காகச் சவுதி அரேபியா அரசுக்கும் இத்தாலி அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு (MoU) அமைச்சரவை அங்கீகாரம் அளித்தது.
சவூதி அரேபியாவில் உள்ள மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகம் மற்றும் ஆக்ஸ்போர்டு இடையே அறிவியல், ஆராய்ச்சி, கல்வித்துறை மற்றும் அறிவு பரிமாற்றம் ஆகிய துறைகளில் வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக இஸ்லாமிய ஆய்வுகளுக்கான ஆக்ஸ்போர்டு மையத்துடன் விவாதம் நடத்த மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் தலைவருக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
SSA க்கும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் (ISRO) இடையே ஒரு வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இந்திய தரப்புடன் விவாதிக்க, சவுதி விண்வெளி ஏஜென்சியின் (SSA) இயக்குநர்கள் குழுவின் தலைவரான தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சருக்கு இது அங்கீகாரம் அளித்தது.
கணக்கியல், தணிக்கை மற்றும் தொழில்முறை பணிகளில் ஒத்துழைப்பதற்காக GCA மற்றும் இந்தியாவின் கன்ட்ரோலர் மற்றும் ஆடிட்டர் ஜெனரல் (CAG) இடையே ஒரு வரைவு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இந்திய தரப்புடன் விவாதிக்க பொது தணிக்கை நீதிமன்றத்தின் (GCA) தலைவருக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்ததுள்ளது.
சவூதி அரேபியாவில் அரசு நிதியுதவி பெறும் ஆராய்ச்சி உள்கட்டமைப்பிற்கான திறந்த அணுகல் கொள்கைக்கு இது ஒப்புதல் அளித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.